சனி, 16 ஆகஸ்ட், 2014

பஞ்சில் கனலின் பொறி.

வெந்து நீர்ந்தொரு
பிரசவம் முடிந்த களைப்பில்
குருதி தோய்ந்த மாலை
உன்னைப் பார்த்த பொழுதாயிருக்கும்!
எல்லோரும் புகழ்ந்து பேசும்
உன்னோடு
போட்டியிடுதற்கே ஆயிருந்ததென் புறப்பாடு!
உரிய ஆயுதங்களும், கவசங்களும்,
எடுத்து வைத்திருக்கிறேன்!

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

உயிர்ச்சிற்பம்
எந்தப் பறவையோ
இட்ட எச்சத்திலிருந்து,
மலையில் தெறித்த
விதையொன்று,
யாரும் காணாப் பெருவெளி விழுந்து
கண்திறக்கிறது!